கொங்கு மண்டலம் செழிக்க பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவதுதான் ஒரே தீர்வு கொ.ம.தே.க. ஆர்ப்பாட்டத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு
கொங்கு மண்டலம் செழிக்க பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவதுதான் ஒரே தீர்வு என்று கொ.ம.தே.க. ஆர்ப்பாட்டத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார்.
மொடக்குறிச்சி,
பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக்கோரி மொடக்குறிச்சி நால்ரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், மாநில விவசாயஅணி செயலாளர் கோபால்சாமி, மாநில இலக்கியஅணி செயலாளர் புலவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் கொங்கு மண்டலம் செழிப்படைந்திருக்கும். தமிழகத்தில் உற்பத்தியாகி 8 கி.மீ. தூரம் சென்று கேரளாவில் கடலில் கலக்கும் தண்ணீரை அணைகட்டி தேக்கி தமிழகத்திற்கு திருப்பினால் கொங்குமண்டலத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வருடம் முழுவதும் விவசாயம் செழிக்கும். குடிநீர் பஞ்சமே வந்திருக்காது.
குறிப்பாக கீழ்பவானி அணைக்கு நீர் ஆதாரமே ஊட்டி, கூடலூர் பகுதியில் உற்பத்தியாகி வரும் மோயாறுதான். இந்த ஆற்றை ஒட்டியுள்ள சிற்றாறுகளை இணைத்தாலே ஆண்டுமுழுவதும் கீழ்பவானி அணைக்கு தண்ணீர் வரும். இதனால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் உள்ளிட்ட கீழ்பவானி பாசனங்கள் வளம்பெறும்.
வருகிற தேர்தலில் இக்கோரிக்கைதான் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருக்கும். இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற ஆளும் அரசு நிர்வாகம் முன்வரவேண்டும். அதற்கு அனைத்துகட்சியினரும் ஓன்றிணைந்து போராட வேண்டும்.
கொங்கு மண்டலம் செழிக்க பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தினை நிறைவேற்றுவதுதான் ஒரே தீர்வு. இத்திட்டம் நிறைவேறும்வரை போராட்டம் தீவிரமடையும். அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் பாகுபாடின்றி இந்த உன்னத திட்டம் நிறைவேற பாடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அனைவரையும் மாவட்ட இணைசெயலாளர் கனகராஜ் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ்குமார் (வடக்கு), சிவக்குமார் (மேற்கு), சக்திவேல் (தெற்கு), கொடுமுடி ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் (மேற்கு), கிருஷ்ணமூர்த்தி (தெற்கு), வேலுசாமி (வடக்கு) உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story