ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
புனேயில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
புனே,
புனே, பாராமதி போலீஸ்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் தாதாசாகிப் மகாதேவ்(வயது47). நிலப்பிரச்சினை தொடர்பாக விவசாயி ஒருவர், பாராமதி போலீசில் புகார் அளிக்க வந்துள்ளார். விவசாயியின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ்காரர் தாதாசாகிப் மகாதேவ் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து விவசாயி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த யோசனையின்படி விவசாயி போலீஸ்காரர் தாதாசாகிப் மகாதேவை சம்பவத்தன்று சந்தித்து லஞ்சப்பணம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் போலீஸ்காரர் தாதாசாகிப் மகாதேவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story