கடலூர் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் மூலம் 2,930 வழக்குகளுக்கு தீர்வு


கடலூர் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் மூலம் 2,930 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 15 July 2018 5:38 AM IST (Updated: 15 July 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீர்வு மையத்தில் தேசிய லோக் அதாலத் நேற்று நடந்தது. இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திலகவதி கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், தலைமை குற்றவியல் நடுவர் ரவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தரம், வக்கீல்கள் சங்க தலைவர்கள் லோகநாதன், சிவராஜ் மற்றும் வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் ரெங்கநாதன், காப்பீட்டுநிறுவன அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து க

கடலூர்,

கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீர்வு மையத்தில் தேசிய லோக் அதாலத் நேற்று நடந்தது. இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திலகவதி கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், தலைமை குற்றவியல் நடுவர் ரவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தரம், வக்கீல்கள் சங்க தலைவர்கள் லோகநாதன், சிவராஜ் மற்றும் வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் ரெங்கநாதன், காப்பீட்டுநிறுவன அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேப்போல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களிலும் தேசிய லோக் அதாலத் நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நீதிமன்றத்துக்கு வராத காசோலை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 2,930 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.


Next Story