வேலூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 2,778 வழக்குகளுக்கு தீர்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,778 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களில் உள்ள கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கினார். நீதிபதிகள் செல்வசுந்தரி, பாரி, லதா, ராஜூ, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அஜீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, வங்கி வராக்கடன் உள்பட பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு தொகை பெற்றுத்தரப்பட்டது.
அதன்படி விபத்தில் பாதிக்கப்பட்ட ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி வழங்கி பேசுகையில், “கடந்த ஒரு வாரமாக நடந்து முடிந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் இதுவரை 146 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.7 கோடி இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவதோடு, நிரந்தர தீர்வும் கிடைக்கிறது. அதனால் மேல் முறையீட்டுக்குச் செல்வது தவிர்க்கப்படுகிறது. எனவே இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக சுதா என்கிற திருநங்கை மாவட்டத்தில் முதன் முறையாக மக்கள் நீதிமன்றத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, வங்கி வராக்கடன், வங்கி காசோலை தொடர்பான வழக்கு, உரிமையியல் வழக்குகள் என நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தது மற்றும் மக்கள் நீதிமன்றம் எடுத்துக்கொண்ட வழக்குகள் என மொத்தம் 10 ஆயிரத்து 696 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் ஒரேநாளில் 2 ஆயிரத்து 778 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.16 கோடியே 86 லட்சத்து 95 ஆயிரத்து 432 வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story