பெங்களூரு வளர்ச்சி பணிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை


பெங்களூரு வளர்ச்சி பணிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 15 July 2018 5:47 AM IST (Updated: 15 July 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கிருஷ்ணா இல்லத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்

பெங்களூரு,

ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜய பாஸ்கர், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி அஜய்சேத், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் விரிவாக முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

அத்துடன் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி செய்ய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைத்தல், மெட்ரோ ரெயில் மேம்பாலங்கள் அமைத்தல், ஏரிகளை பாதுகாத்து மேம்படுத்துதல், குப்பை பிரச்சினைகளுக்கு நிரந்தரவு தீர்வு காணுதல் ஆகியவை குறித்தும், வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது மாதம் ஒரு முறை பெங்களூருவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் நகரில் நடைபெற்றும் வளர்ச்சி பணிகளை எந்த விதமான கால தாமதமும் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். 

Next Story