விமான தீயணைப்பு பெண்
விமானங்கள் தரை இறங்கும்போது திடீரென்று விபத்து ஏதேனும் நடந்தால், அதை தடுப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
விமானங்கள் தரை இறங்கும்போது திடீரென்று விபத்து ஏதேனும் நடந்தால், அதை தடுப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இந்த பணியில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கொல்கத்தாவை சேர்ந்த தானியா சன்யால் முதல் பெண் தீயணைப்பு வீராங்கனையாக நியமிக்கப்பட்டுள்ளார். அபாயகரமான சூழலில் சாதுரியமாக செயல்படுவது எப்படி? என்பது பற்றி பிரத்யேக பயிற்சிகளை அவர் பெற்று வருகிறார். விமான நிலைய தீயணைப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
‘‘விமான நிலைய விரிவாக்கத்தால் புதிய விமான நிலையங்களில் தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதில் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் பெண்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தும் நோக்கில் விதிமுறைகளை தளர்த்தியுள்ளோம். ஆண்கள் 50 கிலோ எடையும்,1.6 மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். பெண்கள் 40 கிலோ எடை இருந்தால் போதுமானது. அவர்களுடைய உடல் தகுதியை கருத்தில் கொண்டு, எடையைப்போல உயரத்தின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகராட்சியில் தீயணைப்பு வீரர்கள் தேர்வில் இதுபோன்ற விதிமுறைகளை நான் மாற்றியிருக்கிறேன். அதேபோல் பெண் தீயணைப்பு படையினரை நியமிப்பதற்கு விதிமுறையை வகுத்துள்ளோம். இந்த விதிமுறைகளின்படி முதல் பெண் என்ற தகுதியை தானியா சன்யால் பெற்றிருக்கிறார்’’ என்கிறார், விமான நிலைய ஆணையத்தின் தலைவர், மஹாபாத்ரா.
தானியா பி.எஸ்சி படித்தவர். கொல்கத்தா, பாட்னா, புவனேஸ்வர், ராய்பூர், கயா மற்றும் ராஞ்சி ஆகிய பகுதிகளில் பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சிக்கு பின் இந்த விமான நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் பணி புரிவார். ‘‘சவாலான ஒன்றை செய்யவே நான் விரும்பினேன். தீயணைப்பு துறையில் இடம் பிடித்திருப்பது பெருமையையும், மரியாதையையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது’’ என்கிறார்.
Related Tags :
Next Story