கன்னியாகுமரி மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கன்னியாகுமரி மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 July 2018 10:45 PM GMT (Updated: 15 July 2018 4:32 PM GMT)

காமராஜர் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு கல்வி நிறுவனங்களில்  ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அனுசரித்து மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சகாயம், வக்கீல் ஞானசேகர், நாஞ்சில் சந்திரன், அரசு அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல், காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story