மார்த்தாண்டம் அருகே கடன் தொல்லையால் லாரி டிரைவர் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே கடன் தொல்லையால் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 40), லாரி டிரைவர். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அருள்தாசுக்கு சரியாக வேலை கிடைக்காததால் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டார். மேலும், குடும்ப செலவை எதிர்கொள்ள பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கினார். ஆனால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையே பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், அருள்தாஸ் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார். மேலும், யாருடனும் அதிகம் பேசாமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று அருள்தாஸ் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த மனைவியும், மகள்களும் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அருள்தாசை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாஸ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story