கோவிலில் தடையை மீறி விளக்கேற்ற இந்து மக்கள் கட்சியினர் முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


கோவிலில் தடையை மீறி விளக்கேற்ற இந்து மக்கள் கட்சியினர் முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவிலில் தடையை மீறி கோவிலுக்குள் விளக்கேற்ற இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த

கும்பகோணம்,

கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவிலில் தடையை மீறி கோவிலுக்குள் விளக்கேற்ற இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட தடைவிதித்துள்ளது. இந்த தடையை நீக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோவிலில் நேற்று தடையை மீறி கோவிலுக்குள் சென்று 1008 விளக்கேற்றி வழிபாடு செய்வதற்காக வந்தனர்.

இந்த போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி நகர பொதுச்செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் லோகசெல்வம், மாவட்ட அமைப்பாளர் விஜய்பிரபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சேகர், கும்பகோணம் ஒன்றிய தலைவர் கணேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் செயல் அலுவலர்கள், போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் கொண்டு வந்த விளக்குகளை கோவிலின் முன்பு ஏற்றி வைத்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி கூறுகையில், ‘‘இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பால் தமிழ் இந்துக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். அதுமட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறைக்கு பல கோடி இழப்பீடு ஏற்படுகிறது.

தற்போது தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் தீப சீட்டு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மண்பானை, எண்ணெய், திரிநூல் வியாபாரிகள் பல லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். பண்டைய காலம் தொட்டு இந்து தமிழர்கள் கோவில்களுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ள காரணத்தினால் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.


Next Story