சேலம் பசுமை வழிச்சாலையை கண்டித்து திருவண்ணாமலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்


சேலம் பசுமை வழிச்சாலையை கண்டித்து திருவண்ணாமலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 15 July 2018 10:45 PM GMT (Updated: 15 July 2018 7:12 PM GMT)

சேலம் பசுமை வழிச்சாலையை கண்டித்து திருவண்ணாமலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தொல்.திருமாவளவன் பேட்டி.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், அங்க னூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் தந்தை நினைவு நாள் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டு அங்கு நடை பெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப் போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

கல்வியை பொதுப்பட்டியி லிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் நீட் தேர்வினால் மாணவ-மாணவி கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் பினாமியாக உள்ள தமிழக அரசின் மீது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டு கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ள விரிசலை சரிகட்டவே தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை இரு கட்சிகளும் தாயும், மகளும் போல என கூறி வருகின்றார். தி.மு.க. கூட்ட ணியில் உள்ள கட்சிகள் மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். இக்கூட்டணி தேர்தலிலும் தொடரும். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கின்ற கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இதனை தி.மு.க. மூத்த நிர்வாகிகள் புரிந்து கொள்வார்கள். சேலம் பசுமை வழிச்சாலை விவசாயி களின் கோரிக்கைக்கு எதிராக அமைக்கப்படுகிறது. இதனை கண்டித்தும் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் திருவண்ணாமலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) யும், சேலத்தில் 20-ந்தேதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story