சிம்மக்கல் நாடார் உறவின் முறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்


சிம்மக்கல் நாடார் உறவின் முறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 16 July 2018 4:00 AM IST (Updated: 16 July 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் சிம்மக்கல் நாடார் உறவின் முறை சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர்.

மதுரை,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிம்மக்கல் நாடார் உறவின் முறை மற்றும் இளைஞர் பேரவை சார்பில் முளைப்பாரி, பால் குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், குமரி கன்சல்டன்சி அப்பாசாமி, ராஜா, தனசேகர பாண்டியன், ரமேஷ், ராணி, நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தும், முளைப்பாரி சுமந்தும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் விளக்குத்தூண் காமராஜர் சிலையில் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து அங்கிருந்த காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் பால், பன்னீர் அபிஷேகம் செய்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பாலகுரு, வெற்றிராஜன், வெங்கடேஷ்ராஜா, மாயாண்டி, ஞானசேகரன், பாஸ்கரன், ஞானஜெபமணி, குணசேகரன், சஞ்சீவிமலையமான், அருஞ்சுனை, அருள்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்மக்கல் நாடார் உறவின் முறை தலைவர் திலகர், பொருளாளர் வள்ளிராஜன், செல்வராஜன், செல்வமோகன், தங்கையா ஆகியோர் வரவேற்று பேசினர்.

ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியம், தனுஷ்கோடி, கூடல்நகர் பாலமுருகன், கே.ஆர். மெட்டல் செல்வராஜ், மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் அகஸ்டின், கே.ஆர். மெட்டல் உரிமையாளர் ராஜவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓம்சேர்ம பிரபு, சந்திரமோகன், ஜோசப் வாசுதேவன், சமத்துவ மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் புறாமோகன், ஈஸ்வரன், ஆத்திக்குளம் கார்த்திக், ராஜசேகர், மதன், பாண்டியன், பாலமேடு கார்த்திக், பசுமலை ஜான்கிறிஸ்டோபர், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தின்போது, காமராஜர் வேடமணிந்த ஒருவரை சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில், துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறினார். இதில் தெற்கு வாசல், பாலமேடு, கரும்பாலை, விக்கிரமங்கலம், குருவித்துறை, சோழவந்தான், மேலக்கால், கூடல்நகர், ஊர்மெச்சிகுளம் உள்பட 40–க்கும் மேற்பட்ட உறவின் முறை நிர்வாகிகள், இளைஞர் பேரவையினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிம்மக்கல் நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் ஆர்.வி.டி.ராமையா செய்திருந்தார்.


Next Story