புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 16 July 2018 4:15 AM IST (Updated: 16 July 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் காற்று அதிகமாக வீசக்கூடும். இதனால் படகுகள் திசை மாறி செல்லக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 14-ந் தேதி மீன்வளத்துறையினரால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர். இந்நிலையில் வங்க கடலில் அதே நிலை தொடர்வதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. 

Next Story