கறம்பக்குடி அருகே மங்கான் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கிய பொதுமக்கள்
கறம்பக்குடி அருகே மங்கான் குளத்தை தூர்வாரும் பணியை பொதுமக்கள் தொடங்கினர். முன்னதாக அவர்கள் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
கறம்பக்குடி,
நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைக்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்ட பணிகளை நிறைவேற்றி வருகின்றன. இதில் எல்லா பகுதி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைவதில் சிக்கல் நீடிக்கிறது. சில பகுதிகளில் பாசன குளங்கள் தூர்வாராததாலும், நீர் வரத்துவாரிகள் சீரமைக்கப்படாததாலும் மழை பெய்தாலும் பாசன குளங்கள் நிரம்புவது இல்லை. இதனால் குளத்து பாசனத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காக்காடு கிராமத்தில் 100 ஏக்கர் பாசன பகுதி கொண்ட மங்கான்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதேபோல் வரத்துவாரிகளும் பல இடங்களில் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் சமீபத்தில் பரவலாக மழை பெய்தும், குளத்திற்கு போதுமான அளவு மழைநீர் வரவில்லை.
இந்த நிலை நீடித்தால், இந்த ஆண்டு பருவமழை பெய்தாலும், குளம் நிரம்பாமல் விவசாயம் பொய்த்து போகும் என்று கருதிய அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசை எதிர்பார்க்காமல், தாங்களே பாசன குளத்தை தூர்வாருவது என்று முடிவு செய்தனர். இதற்காக கருக்காக்காடு ஆதிதிராவிடர் தெருவில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை மங்கான் குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது. முன்னதாக இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ய வேண்டியும், குளம் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில், “40 ஏக்கர் பரப்பளவில் உள்ள மங்கான் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரத்துவாரிகள் அனைத்தும் புதர்மண்டி கிடப்பதால், மழை பெய்தாலும் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை.
இந்த பகுதியில் உள்ளவர் ஏழை மற்றும் குறு விவசாயிகள். மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில், மழைநீரும் குளத்திற்கு வராமல் வீணாவது எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது. எனவே தான் இனியும் அரசை நம்பினால் ஏமாற்றம்தான் கிடைக்கும் என நினைத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

Related Tags :
Next Story