இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் காயம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது


இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் காயம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2018 3:45 AM IST (Updated: 16 July 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சாபதி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தானகிருஷ்ணன் (வயது 58), சிவக்குமார் ( 55). இருவரும் அண்ணன், தம்பிகள். இந்த நிலையில் சிவக்குமார் வயலில் அண்ணன் சந்தானகிஷ்ணன் பொருட்களை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருடைய குடும்பத்தினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் கற்கள், கட்டைகளால் தாக்கி கொண்டதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதில் சந்தானகிருஷ்ணன் குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், சிவக்குமார் குடும்பத்தினர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 பேர் கைது

இதுகுறித்து சந்தானகிருஷ்ணன் விக்கிரபாண்டியம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிவக்குமார் (55), அவருடைய மனைவி ரசியா, மகன்கள் அருண்பாண்டியன் (23), செந்தில்குமார் (25) ஆகியோர் மீதும், சிவக்குமார் கொடுத்த புகாரில் சந்தானகிருஷ்ணன் மனைவி முத்துலெட்சுமி, மகன்கள் கார்த்தி, சந்திரசேகரன் ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், பாபுதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிவக்குமார், அருண்பாண்டியன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

Next Story