செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
நண்பர்களுடன் சேர்ந்து குளித்த போது, செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி,
குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் பிரகலாதன்(வயது 16). இவர், குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற பிரகலாதன், பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் நேற்று முன்தினம் குன்றத்தூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளிக்க சென்றனர்.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில், சிறுகளத்தூர் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவரின் உடல் மிதந்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார், சங்கரை அழைத்துக்கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றனர்.
பின்னர் ஏரியில் மிதந்த மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். மாணவரின் உடலை பார்த்த சங்கர், அது மாயமான தனது மகன் பிரகலாதன் என்பதை உறுதி செய்தார். மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.
இதையடுத்து போலீசார், பிரகலாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற பிரகலாதன், ஆசிரியர்களுக்கு தெரியாமல் பள்ளியில் இருந்து பாதியில் தனது நண்பர்களுடன் வெளியேறி விட்டார். பின்னர் நண்பர்கள் அனைவரும் சிறுகளத்தூர் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்து உள்ளனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்ட பிரகலாதன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், பயந்து போய் இதுபற்றி யாருக்கும் சொல்லாமல் இருந்து விட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story