அரசின் சேவைகளை பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய புதிய இணையதள வசதி தொடக்கம்
அரசின் சேவைகளை பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய புதிய இணைய தள வசதி தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
மத்திய, மாநில அரசுகளின் மின்னாளுமை திட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்கான பல்வேறு சேவைகள் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும், பொது இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அரசு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமும், கூட்டுறவு சங்கங்களும் ஏற்று நடத்துகின்றன. அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே பொது இ-சேவை மையங் களில் விண்ணப்பித்து சான்றிதழ் பெறும் வசதி கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
மின்னாளுமை திட்டத்தில் உரிமம் பெற்ற அமைப்புகள் மட்டும் சேவை மையம் நடத்தி வருகின்றன. பொதுமக்கள் எளிதாக அரசு சேவைகளை பெற்று பயனடையும் வகையில், பொது இ-சேவையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இ-சேவை மையங்களில் கிடைக்கும் அரசுத்துறை சேவைகளை இணையதளம் மூலமாக எளிதாக பெற்று பயன்பெறலாம். பொதுமக்கள் www.tnsev-ai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருவாய்த்துறை சான்றிதழ், சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பப்பதிவு உள்பட சேவைகளை பெறலாம் என்று வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறிய தாவது:-
இ-சேவை மையத்தில் கிடைக்கும் சேவைகளை இணையதளத்தின் மூலமாக அனைவரும் பெறலாம். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சான்று கோரி விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ் தயாரானதும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story