காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அனைத்து துறைகள் சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சேலம் கலெக்டர் ரோகிணி தகவல்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அனைத்து துறைகள் சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சேலம் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழக-கர்நாடக மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் தற்போது 45 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கின்றது. இன்று (திங்கட்கிழமை) சுமார் 80 ஆயிரம் கனஅடி முதல் 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சற்று மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும்படியும், மேட்டூர், எடப்பாடி தாலுகாக்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்.1077-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து நீர்வரத்து குறித்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டு தகவல்களை கேட்டு வருகிறோம். 12 மாவட்ட கலெக்டருடன் காவிரி நீர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறோம். மேட்டூர் அணை 90 அடி எட்டியதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்படி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story