முதல்–மந்திரி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் பரமேஸ்வர் பேட்டி


முதல்–மந்திரி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2018 11:14 PM GMT (Updated: 15 July 2018 11:14 PM GMT)

முதல்–மந்திரி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமிக்கு பெங்களூருவில் உள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதார். அவர் பேசுகையில், “நான் முதல்–மந்திரி ஆகி இருப்பதற்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. தேர்தலின்போது மக்கள் நல்ல ஆதரவு வழங்கினர். ஆனால் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப்போடவில்லை“ என்று கூறி கண்ணீர் சிந்தினார்.

இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரசாமி கண்ணீர் சிந்தியது குறித்து துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “மக்கள் ஆதரவு வழங்கி இருக்கிறார்கள். முதல்–மந்திரி குமாரசாமி கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு முதல்–மந்திரி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். முதல்–மந்திரி மகிழ்ச்சியாக இருந்தால், நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம்“ என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, “முதல்–மந்திரி கண்ணீர் சிந்துவது சரியல்ல. மதசார்பற்ற கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கி இருக்கிறார்கள். முதல்–மந்திரி கண்ணீர் சிந்தினால் அது மக்களுக்கு தவறான செய்தியை அனுப்புவதாக அமைந்துவிடும்“ என்றார்.


Next Story