மும்பையில் பயங்கர கடல் சீற்றத்தால் மக்கள் பீதி
மும்பையில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றத்தால் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மும்பை,
மும்பையில் நேற்று முன்தினம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கரையோர பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
இந்தநிலையில் நேற்றும் மும்பையில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 5 மீட்டர் (16.4 அடி) உயரத்திற்கு ஆக்ரோஷத்துடன் கரையை அலைகள் தாக்கின. பயங்கர சத்தத்துடன் எழுந்த இந்த அலைகளால் கடலோரம் இருந்த மக்கள் மிரண்டனர்.
மெரின் டிரைவ் பகுதியில் கடல் அலை கரையை பயங்கரமாக தாக்கியது. வேடிக்கை பார்த்தவர்கள் பய உணர்வுடன் அலை சாரலில் நனைந்து மகிழ்ந்தனர்.
மேலும் ராட்சத அலைகளால் கரையோர வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். பலர் வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். உடைமைகளை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தினர்.
இதேபோல ராட்சத அலைகள் கடலில் இருந்த குப்பைகளை வெளியே அள்ளி வீசின. இதனால் கடற்கரைகள் குப்பை கூடங்கள் போல காட்சி தந்தன. குறிப்பாக மெரின்லைன் பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குப்பைகள் கிடந்தன. அந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
நேற்று மும்பையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எனினும் பெரிய அளவில் எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் மும்பையில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். இன்று மதியம் 2.37 மணிக்கு 4.89 மீட்டர் உயரத்திற்கும், நாளை மதியம் 3.25 மணிக்கு 4.70 மீட்டர் உயரத்திற்கும் அலையின் சீற்றம் இருக்கும் என மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டு்ம் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டு உள்ளது.

Related Tags :
Next Story