விஷம் கொடுக்கவில்லை குமாரசாமிக்கு ஆட்சி, அதிகாரத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளது
குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சி விஷம் கொடுக்கவில்லை என்றும் அவருக்கு ஆட்சி, அதிகாரத்தை கொடுத்துள்ளது என்று முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு தெரிவித்துள்ளார்.
மைசூரு,
முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஏ.மஞ்சு நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது அவர் கூட்டணி ஆட்சியால் விஷத்தை விழுங்கி மக்களுக்கு அமுதத்தை கொடுத்து வருகிறேன். நான் முள்படுக்கையில் படுத்த நிலையில் உள்ளேன் என்று கூறி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சி விஷம் கொடுக்கவில்லை.
அவருக்கு நாங்கள் நல்லது செய்துள்ளோம். அவர் எதிர்பார்த்தபடி ஆட்சி, அதிகாரத்தை கொடுத்துள்ளோம். ஆனால் அவர் இப்படி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது கோழைத்தனமான செயல். விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கு தன்னிடம் அதிக துறைகளை வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, அந்த துறைகள் மூலம் வருவாய் ஈட்டுவதை கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும். அதற்காக அவர் கண்கலங்க கூடாது. கவலைப்படக் கூடாது.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள், மந்திரிகள் தவறு செய்திருக்கிறார் என்ற ரீதியில் குமாரசாமி பேசுவது சரியல்ல. அவரது பேச்சு எனக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி ஆட்சியில் பிரச்சினை வரத்தான் செய்யும். அதை எதிர்கொண்டு ஆட்சி நடத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால், ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசுக்கு பயனுள்ள சில தகவல்களை கூறியுள்ளார். அதை கவுரவமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சித்தராமையா கடிதம் எழுதியதை குற்றம் என்று பார்க்கிறார்கள். அது தவறு அல்ல. ஏற்கனவே எச்.டி.தேவேகவுடா, சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது கடிதம் எழுதி இருந்தார். எனவே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story