மோகனூர் ஒன்றிய பகுதியில் ரூ.1.03 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ரூ.1 கோடி 3 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
மோகனூர்,
மோகனூர் ஒன்றியம் கொமரிபாளையம் ஊராட்சிக்கு காவிரி ஆற்றில் குடலை கிணறு வெட்டி குடிநீர் குழாய் அமைக்க மாவட்ட மானிய நிதிக்குழு மூலம் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பணி தொடங்க பூமி பூஜை மோகனூர் காவிரி ஆற்றில் நடந்தது. பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறை மூலம் மோகனூர் நாவலடியான் கோவில் அருகே குடிமராமத்து பணி மூலம் மோகனூர் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பள்ள வாய்க்கால் புனரமைக்கும் பணிக்கு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பூமி பூஜை நடந்தது.
இதேபோல் ஒருவந்தூர் ஊராட்சி மொச்சப்பட்டி பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தார்சாலை அமைக்க தமிழ்நாடு ஊரக சாலை உட்கட்டமைப்பு திட்டம் மூலம் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பூமி பூஜையும், ஆண்டாபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டம் மூலம் தார்சாலை அமைக்க ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பணிகள் தொடக்க விழாவும் நடந்தது. மொத்தம் ரூ.1 கோடி 3 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன், நகர செயலாளர் தங்கமுத்து, கொமரிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், நிலவள வங்கி முன்னாள் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story