சேலம் கந்தம்பட்டியில் டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலம் கந்தம்பட்டியில் உள்ள டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை போனது. இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சூரமங்கலம்,
சேலம் கந்தம்பட்டியில் உள்ள மேம்பால நகரை சேர்ந்தவர் ரகீமா (வயது 48). டாக்டரான இவர் வீட்டில் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த வாரம் ரகீமா வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றார். நேற்று காலை வேலையை முடித்து விட்டு ரகீமா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் எல்லாம் வெளியே தூக்கி வீசப்பட்டு கிடந்தது. இதேபோல், வீட்டில் இருந்த மற்ற அறைகளிலும் பொருட்கள் சிதறி கிடந்தன. இது குறித்து ரகீமா சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே தகவலறிந்து வந்த துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை அங்கு வந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ரகீமா வீட்டில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை, வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பீரோ மற்றும் கதவில் கைரேகைகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். பின்னர் அதில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை அவர்கள் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ரகீமா புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் சமீபகாலமாக அதிகமாக நகை கொள்ளை மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story