ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 17 July 2018 3:00 AM IST (Updated: 17 July 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரம் அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இளையான்குடி,

இளையான்குடி காதர் பிச்சை தெருவில் வசிப்பவர் முகமது ஆரிப் மனைவி மரியம் பீவி(வயது 65). இவரது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மரியம்பீவிக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளார். அதில் பேசிய நபர் வங்கி மேலாளர் பேசுவதாக கூறியுள்ளார். தொடர்ந்து மரியம்பீவியிடம் வங்கி கணக்கு முடிந்துவிட்டதாகவும், இதனால் பணம் எடுக்கவோ, போடவோ முடியாது என்று கூறி, ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்களை கேட்டுள்ளார் அந்த நபர்.

 இதனையடுத்து மரியம்பீவி ஏ.டி.எம். கார்டு எண் விவரத்தை கூறியுள்ளார். இதன்பின்பு அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரம் மாயமானது. இதுகுறித்து மரியம்பீவி வங்கியில் சென்று கேட்டபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story