கூடுவாஞ்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 49 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
கூடுவாஞ்சேரியில், வீட்டின் பூட்டை உடைத்து 49 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி மோகனப்பிரியா நகரைச் சேர்ந்தவர் அல்லா பிச்சை(வயது 48). இவர் கடந்த 13-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன.
பின்னர் பீரோவில் சோதனை செய்தபோது, அதில் வைத்து இருந்த 49 பவுன் தங்க நகைகள், 700 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவை திருடுப்போனது தெரியவந்தது.
அல்லா பிச்சை குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகை, வெள்ளி மற்றும் பணத்தை அள்ளிச்சென்று விட்டது தெரிந்தது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story