‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது அரசின் கொள்கை முடிவுதான்’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது அரசின் கொள்கை முடிவுதான்’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 17 July 2018 4:45 AM IST (Updated: 17 July 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது அரசின் கொள்கை முடிவுதான் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலைகள் அதிகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வருகின்றன. இந்த புகார்கள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை மாவட்ட நிர்வாகம் மூலம் சரிசெய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்த உள்ளேன். அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும்.

தமிழக அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாணை வெளியிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. அரசின் கொள்கை முடிவுபடி இந்த ஆலை மூடப்பட்டு உள்ளது. இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கி உள்ளது. அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு மாற்று வேலை வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

தமிழக அரசு மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஊழல் புகார்களை சிலர் கூறி வருகின்றனர். ஆனால் எந்த புகாரும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. தமிழகத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. தமிழகம் அமைதி பூங்காவாக சிறப்பான ஆட்சியை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story