ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட வாலிபரை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்காரர்
ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட வாலிபரை ரெயில்வே போலீஸ்காரர் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் பன்வெல் ரெயில் நிலையத்தில் நடந்து உள்ளது.
மும்பை,
ராய்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி(வயது25). இவர் பர்பானி செல்வதற்காக பன்வெல்- நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். சம்பவத்தன்று ரவி பர்பானி செல்ல பன்வெல் ரெயில்நிலையம் சென்றார். இதில், அவர் சில வினாடிகள் தாமதமாக சென்றுள்ளார். எனவே ரெயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஓடிச்சென்று மெதுவாக சென்று கொண்டு இருந்த ரெயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். எனினும் அவர் கீழே விழாமல் ரெயில் வாசல் கைப்பிடியை கெட்டியாக பிடித்து கொண்டார். எனவே அவர் ரெயிலுடன் இழுத்து செல்லப்பட்டார். வாலிபரின் கால்கள் பிளாட்பாரத்தில் உரசியபடி சென்றன.
அப்போது பயணி ஒருவர் வாலிபரை மீட்க முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் வினோத்(37) என்பவர் ஓடிவந்தார். அவர் ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட வாலிபரை லாவகமாக பிடித்து இழுத்தார். இதனால் 2 பேரும் பிளாட்பாரத்தில் விழுந்தனர்.
ஒருவேளை ரெயில்வே போலீஸ்காரர் காப்பாற்றவில்லையென்றால் ரவி பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் உள்ள இடைவெளியில் விழுந்து பலி ஆகி இருப்பார்.
இதேபோல காப்பாற்றும் முயற்சியின் போது போலீஸ்காரர், வாலிபர் 2 பேரும் ரெயில் சக்கரத்தில் சிக்கவும் வாய்ப்பு இருந்தது. எனவே தன் உயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் வாலிபரை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்காரரை பயணிகள், உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
இந்தநிலையில் ரெயிலில் இழுத்து செல்லப்பட்டதில் வாலிபர் ரவிக்கு காலில் காயம் ஏற்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பன்வெல் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த பரபரப்பு காட்சிகள் ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

Related Tags :
Next Story