சென்னையில் பி.எட். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது


சென்னையில் பி.எட். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 July 2018 4:05 AM IST (Updated: 17 July 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

பி.எட். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

சென்னை, 

பி.எட். படிப்பில் சேர்வதற் கான கலந்தாய்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

2017-18 பி.எட். படிப்பில் சேர்வதற்கான ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வு 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,707 இடங்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முதற்கட்ட கலந்தாய்வு சென்னை கடற்கரை சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும். நாளை சிறப்பு பிரிவினருக்கும், 19-ந்தேதி முதல் பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

6,073 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்ட கலந்தாய்விற்கு 4 ஆயிரத்து 23 மாணவர்களுக்கு கீழ்கண்ட கால அட்டவணையின்படி கலந்தாய்வு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பப்பட்டுள்ளது.

அட்டவணை

19-ந்தேதி காலை 9 மணிக்கு தமிழும், மதியம் 1 மணிக்கு ஆங்கிலமும் நடக்கிறது.

20-ந்தேதி காலை 9 மணிக்கு தாவரவியலும், மதியம் 1 மணிக்கு விலங்கியலும் நடைபெற உள்ளது.

21-ந்தேதி காலை 9 மணிக்கு இயற்பியலும், மதியம் 1 மணிக்கு வரலாறும் நடக்கிறது.

22-ந்தேதி காலை 9 மணிக்கு வேதியியலும், மதியம் 1 மணிக்கு மனையியல், பொருளியல் வணிகவியல் நடைபெற உள்ளது.

23-ந்தேதி காலை 9 மணிக்கு புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மதியம் 1 மணிக்கு கணிதம் (ஆண்கள்) நடக்க இருக்கிறது.

24-ந்தேதி காலை 9 மணிக்கும் பகல் 1 மணிக்கும் பெண்களுக்கு கணிதம் நடைபெற உள்ளது.

இந்த தகவலை அரசு ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது. 

Next Story