பிவண்டி கலவர வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது 12 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்
பிவண்டி கலவர வழக்கில் தேடப்பட்டு வந்தவரை 12 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தின் அருகே கடந்த 2006-ம் ஆண்டு போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், அதே ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக அங்கு பெரிய கலவரம் மூண்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ரமேஷ் ஜக்தாப் மற்றும் பாலாசாகேப் கங்குர்டே ஆகிய 2 போலீஸ்காரர்களை அடித்துக்கொலை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையின் போது 30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த கலவரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கலவரத்தில் தொடர்புடைய முகமது யூசுப் என்பவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், அவர் பிவண்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கலவர வழக்கில் அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story