மராட்டியம் முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் நகரங்களில் பால் தட்டுப்பாடு அபாயம்
போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் கொழுந்து விட்டு எரியும் பால் லாரி. பால் கொள்முதல் விலையை ரூ.5 உயர்த்தக்கோரி மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பால் வாகனங்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை விவசாய அமைப்பினர் தொடங்கினர். இதனால் நகரங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ளது.
பருவ மழையின்மை, வறட்சி, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால் விவசாயம் பாதிக்கப்படும் போது கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பால் உற்பத்தி தான் விவசாயிகளை காப்பாற்றி வருகிறது. எனினும் தற்போது பாலுக்கும் உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு லிட்டர் பாலுக்கு உற்பத்தி செலவு ரூ.30 வரை ஆவதாகவும் ஆனால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
மராட்டியத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.17 வழங்கப்படுகிறது. இந்த பால், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.42 முதல் ரூ.54 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் விவசாயிகள் பால் கொள்முதல் விலையை ரூ.5 அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எனினும் அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
இதையடுத்து பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவும், பால் பொருட்களான வெண்ணெய், பால் பவுடர் மீது விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்தனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது.
கோலாப்பூரை சேர்ந்த சுவாபிமானி சேத்காரி சங்க தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி. தலைமையில் மாநிலம் முழுவதும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு குஜராத் பட்டேல் இனத் தலைவர் ஹார்திக் பட்டேல் மற்றும் கர்நாடக விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் நேற்று போராட்டம் தொடங்கியதை அடுத்து நாசிக், புனே, அகமதுநகர், புல்தானா, ஜல்காவ் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மும்பை, புனேக்கு கொண்டு வரப்பட இருந்த பால் டேங்கர் லாரிகள், வாகனங்களை விவசாய அமைப்பினர் வழிமறித்தனர். அவர்கள் வாகனங்களில் இருந்த பால் கேன்களை எடுத்து ரோட்டில் கொட்டினர்.
இதேபோல சில இடங்களில் லாரி டேங்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பால் வெளியேற்றப்பட்டது. மாலேகாவில் விவசாய அமைப்பினர் ஒரு பால் லாரிக்கு தீ வைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ பரவாததால் லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
புனே- சோலாப்பூர் ரோட்டில் மட்டும் 6 பால் லாரிகள் வழிமறிக்கப்பட்டதாக விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர். மாநிலத்தின் பல இடங்களில் விவசாயிகள் ஏழைகளுக்கு பாலை இலவசமாக வழங்கினர். இதேபோல சில இடங்களில் பாலை ரோட்டில் கொட்டி போராட்டங்களும் நடந்தன.
வாலிபர் ஒருவர் பாலில் குளிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் போராட்டம் குறித்து சுவாபிமானி சேத்காரி சங்க தலைவர் ராஜூ ஷெட்டி கூறியதாவது:-
பாலை ரோட்டில் கொட்டுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் அரசு பால் பண்ணைகளை பாதுகாத்து, விவசாயிகளின் வேதனைகளை கண்டு கொள்ளாமல் உள்ளது. அரசை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் கட்டாயத்தின் பேரில் நாங்கள் போராடும் முடிவுக்கு வந்தோம். அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டம் தொடரும். எங்கள் போராட்டத்தை தோல்வி அடைய செய்ய வெளிமாநிலங்களில் இருந்து பாலை கொண்டு வர மாநில அரசு முயற்சி செய்கிறது.
முதலில் அமைதியான முறையிலேயே போராட்டத்தை தொடங்கினோம். அமராவதியில் சங்க தொண்டர்கள் கைது செய்யப்பட்ட பிறகு தான் போராட்டம் தீவிரமடைந்தது. அரசு தான் இதற்கு காரணம். விவசாயிகள் தன்னெழுச்சியாக பால் வாகனங்களை மறிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் நேற்று நாசிக்கில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் 15 பால் லாரிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நாசிக் கலெக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார். மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மும்பையில் மட்டும் 65 லட்சம் முதல் 70 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனையாகிறது. ஏற்கனவே உள்ள பாலின் இருப்பை வைத்து நேற்று மும்பையில் வியாபாரிகள் பால் தேவைகளை சமாளித்தனர்.
விவசாயிகளின் போராட்டம் தொடரும் பட்சத்தில் மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story