நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்
x
தினத்தந்தி 17 July 2018 11:28 AM IST (Updated: 17 July 2018 11:28 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 765 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது அவ்வப்போது ஏராளமான இளைஞர்களுக்கு பயிற்சிப் பணிவாய்ப்பை வழங்குவது உண்டு. தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 765 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் : பிட்டர் - 120, டர்னர் -45, மெக்கானிக் -130, எலக்ட்ரீசியன் - 100, வயர்மேன் - 120, மெக்கானிக் டீசல் -25, மெக்கானிக் டிராக்டர் -25, கார்பெண்டர்- 10, பிளம்பர் -20, வெல்டர் - 70, பி.ஏ.எஸ்.ஏ.ஏ. -40, அக்கவுண்டன்ட் - 20, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 20, அசிஸ்டன்ட் - 20

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம். பட்டதாரிகளும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பி.எஸ்சி. கணினி அறிவியல் பட்டதாரிகளும், எச்.ஆர். அசிஸ்டன்ட் பணிக்கு பி.பி.ஏ. பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 14 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை


விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் இணைய தனத்தில் இன்று செயல்பாட்டிற்கு வருகிறது. 25-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து, 30-7-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். 

Next Story