ஓடும் பஸ்சில் மேற்கூரை பறந்து விழுந்தது பயணிகள் அதிர்ச்சி
பவானிசாகர், ஓடும் பஸ்சில் மேற்கூரை பறந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பவானிசாகர்,
கோவையிலிருந்து பவானிசாகர் வழியாக அடர்ந்த வனப்பகுதியில் உள்ள நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா வனகிராமத்துக்கு 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் காராச்சிக்கொரையிலிருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான மண்சாலையில் 25 கிலோமீட்டர் பயணிக்கவேண்டும். இந்நிலையில் நேற்று மதியம் தெங்குமரஹாடா செல்வதற்காக 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுபஸ் கோவையிலிருந்து பவானிசாகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
பவானிசாகர் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது அப்பகுதியில் வீசிய பலத்த காற்றில் பஸ்சின் மேற்கூரை தகடு பெயர்ந்து காற்றில் பறந்து சுமார் 100 அடி தொலைவில் சென்று விழுந்தது. இதன்காரணமாக பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேற்கூரை பெயர்ந்ததால் பஸ்சை நிறுத்திய டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் பயணிகளை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு, பஸ்சை கோவைக்கு ஓட்டிச்சென்றனர். வேறு பஸ்சில் பயணிகள் சென்றனர். பராமரிப்பு இல்லாததால் பலத்த காற்றுக்கு அரசு பஸ்சின் மேற்கூரை பறந்து விழுந்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூரை விழுந்த இடத்தில் யாரும் இல்லாததால் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. அரசுபஸ்களை முறையாக பராமரித்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story