செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 18 July 2018 3:00 AM IST (Updated: 18 July 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்து கொண்டிருந்த வாலிபர் திடீரென ஏரியில் மூழ்கினார்.

பூந்தமல்லி, 

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). நேற்று முன்தினம் செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஏரியில் மூழ்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி விஜயகுமார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. 

இதையடுத்து நேற்று காலை செம்பரம்பாக்கம் ஏரி, அகரமேல் பகுதியில் விஜயகுமாரின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

 மது குடித்து விட்டு குளித்த அவர் ஏரியில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

Next Story