8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை சென்டிரல் அருகே ஆர்ப்பாட்டம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) சார்பில் சென்னை–சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாநில செயலாளர் எஸ்.குமாரசாமி தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது சென்னை–சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைய மறுத்தவுடன் போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story