பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த கூட்டம் பாளையங்கோட்டையில், 23-ந் தேதி நடக்கிறது


பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த கூட்டம் பாளையங்கோட்டையில், 23-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 18 July 2018 2:30 AM IST (Updated: 18 July 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் பாளையங்கோட்டையில் 23-ந் தேதி நடக்கிறது.

நெல்லை, 

பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் பாளையங்கோட்டையில் 23-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பாரமரிப்பு கோட்ட பொறியாளர் சங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடிநீர் இணைப்பு

நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து பொதுமக்கள் அல்லாத பிற தனியார் நிறுவனங்களும், தங்கள் தேவைக்கான குடிநீர் இணைப்பு பெற்று பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் இணைப்புக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான விண்ணப்ப கடிதங்கள் பெற்று குடிநீர் இணைப்பு செய்யும் பணி நடக்கிறது. குடிநீர் இணைப்பு தேவைப்படுகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கலந்துரையாடல் கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சார்ந்த நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த கலந்துரையாடல் கூட்டம், பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் பாரமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்தில் கலந்து கொண்டு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பம் கொடுக்கலாம் அந்த விண்ணப்பங்கள் உடனே பரிசீலனை செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story