நிலப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்; 19 பேர் மீது வழக்குப்பதிவு


நிலப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்; 19 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 July 2018 3:45 AM IST (Updated: 18 July 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

நிலம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வி.களத்தூர் போலீசில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் மேற்கு காலனியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 60) வக்கீல். இவரது மனைவி பிரேமலதா (48). இவர் பெயரில் அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக தமிழரசனுக்கும், அதே ஊரை சேர்ந்த செல்லதுரை (50), கோபால் (70), ஞானபிரகாசம் (70) ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நிலம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வி.களத்தூர் போலீசில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், தமிழரசன் உள்பட 9 பேர் மீதும், செல்லதுரை உள்பட 10 பேர் என மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story