கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டம்


கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2018 4:00 AM IST (Updated: 18 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம், திருச்சி மாவட்ட துணை செயலாளர் தனராசு ஆகிய இருவரும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் நேற்று அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம், திருச்சி மாவட்ட துணை செயலாளர் தனராசு ஆகிய இருவரும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய உபகரணங்களான டிராக்டர் உள்பட எந்த பொருட்களையும் வங்கிகள் ஜப்தி செய்யக்கூடாது. மேலும் வட்டியில்லாமல் விவசாய உபகரணங்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.50 லட்சம் அரசு செலவில் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story