கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
நாகர்கோவிலில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்தவர் வேலப்பன் (வயது 54). பலசரக்கு கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அமுதா (45), பூ வியாபாரி. இவர்களுக்கு பிரசன்னகுமார் (18) என்ற மகன் உள்ளார். பிரசன்னகுமார் மதுரையில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். தற்போது அவர், பயிற்சிக்காக மராட்டிய மாநிலம் சென்றுள்ளார்.
எனவே, நாகர்கோவிலில் உள்ள வீட்டில் கணவன்-மனைவி இருவரும் மட்டுமே வசித்து வந்தனர். இவர்கள் வீட்டு தேவைக்காக அதிக கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நாளடைவில், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கணவன்-மனைவி இருவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை அருகில் உள்ள கடைக்கு சென்று வந்த வேலப்பன் வீட்டுக்கு திரும்பி வந்ததும் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
தொடர்ந்து இன்று மாலை வரையில் வேலப்பனின் வீடு பூட்டியே இருந்தது. இதனால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள், வேலப்பன் வீட்டு சமையல் அறை ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய செய்தது. வீட்டின் சமையலறையில் அமுதா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். உடனே இதுகுறித்து அவர்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டின் படுக்கை அறையில் வேலப்பனும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து தொடர்ந்து கணவன், மனைவி இருவருடைய உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
கடன் தொல்லையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story