3 ஏரிகளை தொடர்ந்து 4-வதாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா ஏரி நிரம்பியது


3 ஏரிகளை தொடர்ந்து 4-வதாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 18 July 2018 5:30 AM IST (Updated: 18 July 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

துல்சி, மோடக் சாகர், விகார் ஏரிகளை தொடர்ந்து 4-வதாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா ஏரியும் நிரம்பியது.

மும்பை, 

துல்சி, மோடக் சாகர், விகார் ஏரிகளை தொடர்ந்து 4-வதாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா ஏரியும் நிரம்பியது.

தான்சா நிரம்பியது

மும்பைக்கு மோடக்சாகர், துல்சி, விகார், தான்சா, மேல் வைத்தர்ணா, கீழ் வைத்தர்ணா மற்றும் பட்சா ஆகிய 7 ஏரிகளில் இருந்து குடிநீர் கிடைக்கிறது. இதில், மும்பையில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் துல்சி, மோடக் சாகர், விகார் ஆகிய 3 ஏரிகள் நிரம்பி உள்ளன.

இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 4-வது ஏரியாக தான்சா நிறைந்துள்ளது. தான்சா ஏரி நேற்று காலை 6.15 மணி அளவில் தனது முழு கொள்ளளவை எட்டியது. தற்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் மும்பைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் நிரம்பி உள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் மோடக்சாகர், விகார் மற்றும் தான்சா அடுத்தடுத்த நாட்களில் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீதமுள்ள ஏரிகளும் விரைவில் நிரம்பும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Next Story