கவுன்சிலரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டி அதிகாரிகள் 3 பேர் பணி இடைநீக்கம்

கவுன்சிலரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டி அதிகாரிகள் 3 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 18 July 2018 5:00 AM IST (Updated: 18 July 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

கவுன்சிலரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டி அதிகாரிகள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை, 

கவுன்சிலரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டி அதிகாரிகள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போலி சாதி சான்றிதழ் வழக்கு

மும்பை பாந்திரா கிழக்கு பகுதியில் கவுன்சிலராக இருப்பவர் சகுன் நாயக். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், போலி சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சகுன்நாயக்கின் சாதி சான்றிதழை ஆய்வு செய்யுமாறு, மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டிக்கு உத்தரவிட்டது.

3 அதிகாரிகள் பணி இடைநீக்கம்

இந்தநிலையில் மாநில சாதி சான்றிதழ் சாரிபார்ப்பு கமிட்டியினர் சகுன் நாயக்கிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்பதாக மராட்டிய மேல்-சபையின் சிவசேனா உறுப்பினர் அனில் பரப் மாநில சமூகநீதி துறை மந்திரி ராஜ்குமார் பட்டோலேயிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து மாநில சாதி சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டியின் பொறுப்பாளரும், மாநில இணை செயலாளருமான சித்ரா சூரியவன்சி, அதிகாரிகள் ஆனந்த் தால்வே, அவினாஷ் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த தகவல் நேற்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

Next Story