காஞ்சீபுரத்தில் கோவிலுக்கு வெளியே இருந்த அம்மன் சிலையால் பரபரப்பு


காஞ்சீபுரத்தில் கோவிலுக்கு வெளியே இருந்த அம்மன் சிலையால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 July 2018 5:10 AM IST (Updated: 18 July 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கோவிலில் அம்மன் பித்தளை சிலை வெளியே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் பின்புறம் உள்ளது கங்கையம்மன் கோவில். இந்த கோவிலில், திடீரென 1½ அடி உயரம் உள்ள அம்மன் பித்தளை சிலை கோவிலுக்கு வெளியே யாரோ வைத்து விட்டு சென்றனர். இதை கோவில் அர்ச்சகர் பார்த்து, அந்த அம்மன் சிலையை பத்திரமாக எடுத்து கோவிலில் வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, மற்றும் போலீசார் அந்த கோவிலுக்கு விரைந்து சென்றனர். போலீஸ் விசாரணையில், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில் உள்ள மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான அம்மன் சிலை என்பது தெரியவந்தது.

அவரது வீட்டில் உள்ள பெண்கள் அம்மன் சிலை வீட்டில் இருக்க கூடாது. கோவிலில் வைத்து விடுங்கள் என்று கூறியதால், இந்த அம்மன் பித்தளை சிலையை மகேந்திரன் கோவில் வெளியே வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தார்.

இந்த சிலை 3 ஆண்டுகளுக்கு முன்னதாக வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சிலையை பெரிய காஞ்சீபுரம் போலீசார் கைப்பற்றி, மகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு வெளியே இருந்த அம்மன் சிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story