தக்கலை அருகே மாயமான மாணவன் வாட்ஸ்–அப் தகவலால் மீட்பு


தக்கலை அருகே மாயமான மாணவன் வாட்ஸ்–அப் தகவலால் மீட்பு
x
தினத்தந்தி 18 July 2018 4:00 AM IST (Updated: 18 July 2018 9:48 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மாயமான மாணவன் வாட்ஸ்–அப் தகவலால் மீட்கப்பட்டான்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள மணலி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் அபிலாஷ் (வயது 14), தக்கலை அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான்.

 நேற்று முன்தினம் காலை அபிலாஷ் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாயமான மகனை பல இடங்களில் தேடினார்கள். ஆனால் அபிலாசை கண்டு பிடிக்க முடியவில்லை.

பின்னர், இதுகுறித்து அய்யப்பன் தக்கலை போலீசில் புகார் செய்தார். மேலும், தனது நண்பர்கள் மூலம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்–அப்பில் மகன் அபிலாசின் புகைப்படத்துடன் விவரங்களை வெளியிட்டு, அதனுடன் செல்போன் எண்ணையும் இணைத்து இருந்தார்.

இந்தநிலையில் அய்யப்பன் செல்போனுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் காவலாளியாக உள்ள ஒருவர் தொடர்பு கொண்டு, வாட்ஸ்–அப் மூலம் அபிலாஷ் மாயமான தகவல் தெரிய வந்தது. கோவில் பகுதியில் சுற்றி கொண்டு இருந்த அபிலாசை கண்டு பிடித்துள்ளோம். அவன் எங்களிடம் உள்ளான். உடனே வந்து, உங்கள் மகனை அழைத்து செல்லலாம் என்று கூறினார். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த அய்யப்பன், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தக்கலை போலீசார் உதவியுடன் அய்யப்பன் குடும்பத்தினர் திருச்செந்தூர் சென்று அபிலாசை மீட்டு தக்கலைக்கு அழைத்து வந்தனர். மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story