ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2018 4:30 AM IST (Updated: 18 July 2018 10:03 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வலியுறுத்தி தஞ்சையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நடந்தது. தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட துணைத்தலைவர் சந்தானகோபாலன், மாவட்ட நிர்வாகிகள் சிவசிதம்பரம், பாலசுப்பிரமணியன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் அய்யனார் வரவேற்றார்.


மத்திய அரசின் 7–வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சீனு நன்றி கூறினார்.

Next Story