ரெட்டிச்சாவடியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
ரெட்டிச்சாவடி,
நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசபாளையம், புதுபூஞ்சோலைக்குப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
மேற்கண்ட தகவலை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story