ஆரணி அருகே மணல் கடத்திய 5 மாட்டுவண்டிகள் பறிமுதல்


ஆரணி அருகே மணல் கடத்திய 5 மாட்டுவண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 July 2018 5:00 AM IST (Updated: 18 July 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி தாலுகா சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பையூர் 4 வழிச்சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது மணல் ஏற்றியவாறு 5 மாட்டுவண்டிகள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. அவற்றை நிறுத்திய போலீசார் விசாரித்தபோது அந்த வண்டிகளில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

ஆரணி, ஜூலை.19–

ஆரணி தாலுகா சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பையூர் 4 வழிச்சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது மணல் ஏற்றியவாறு 5 மாட்டுவண்டிகள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. அவற்றை நிறுத்திய போலீசார் விசாரித்தபோது அந்த வண்டிகளில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 5 மாட்டுவண்டிகளையும் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு பிடிபட்ட சங்கர் (வயது 40), நம்பி (45), பிச்சை (53), பெருமாள் (53), சண்முகம் (55) ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர் மணலுடன் மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மேல் விசாரணை நடந்து வருகிறது.


Next Story