தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனங்கள் அகற்றும் பணி முடிவடைவது எப்போது? கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனங்கள் அகற்றும் பணி முடிவடைவது எப்போது? கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 18 July 2018 9:30 PM GMT (Updated: 18 July 2018 6:21 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றும் பணி முடிவடைவது எப்போது? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றும் பணி முடிவடைவது எப்போது? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை கந்தக அமிலம் 5 ஆயிரத்து 400 டன், பாஸ்பாரிக் அமிலம் 470 டன், ஜிப்சம் 20 ஆயிரம் டன், ராக் பாஸ்பேட் 3 ஆயிரம் டன், சிலிசிக் அமிலம் 59 டன், ஐசோபுரோபைல் ஆல்கஹால் 8 டன் அகற்றப்பட்டு உள்ளன.

பெரும்பாலான அமிலங்கள் அகற்றப்பட்டு உள்ளன. 4 நாட்களில் அமிலம் அகற்றும் பணி முடிக்கப்படும். எரிவாயு (எல்.பி.ஜி) 3 டேங்கர் லாரிகளில் வெளியேற்றப்பட்டு உள்ளது. மீதம் உள்ள எரிவாயு 2 நாட்களில் வெளியேற்றப்படும். ஆனால் ஜிப்சத்தை முழுமையாக அகற்ற 30 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனாலும் விரைவாக பணி நடந்து வருகிறது.

ஒரு வாரத்தில்...

அதே நேரத்தில் அங்கு உள்ள டீசல், ரசாயனம் வெளியேற்றும் பணிக்காக 10 ஜெனரேட்டர்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 80 சதவீதம் ரசாயனங்கள் அகற்றப்பட்டு உள்ளன. ஒரு வாரத்தில் ரசாயனங்கள் வெளியேற்றும் பணி முடிக்கப்படும்.

ஏற்கனவே இந்த பணிகளை 30 நாட்களுக்குள் முடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்பிறகு வேறு ஏதாவது பணிகள் விடுபட்டு இருந்தால், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். திட்டமிட்டபடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story