ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும்
கல்லூரிகளில் ராக்கிங் கொடுமையை தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில், ராக்கிங் கொடுமையை தடுப்பது குறித்து மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராக்கிங் கொடுமையை தடுக்க ஏதுவாக கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். மூன்று நபர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவினை அமைக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் ராக்கிங் கொடுமையில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு யோகா மற்றும் மனோதத்துவ நிபுணர்களை கொண்டு கவுன்சிலிங் போன்றவற்றை ஏற்படுத்தவும், விளையாட்டு, கலாசார விழாக்கள் போன்றவற்றை நடத்தி மாணவ, மாணவிகளுக்கிடையே ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர, சுதந்திரமாக கல்வியில் கவனம் செலுத்த போதிய சூழலை ஏற்படுத்திதர வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு அரசு செய்துவரும் நலத்திட்ட உதவிகளை மாணவர்கள் பயன்படுத்தி சமூகத்தில் நல்ல நிலைக்கு வர கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதியதாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இணையதளமான www.ant-i-r-a-g-g-i-ng.com என்னும் இணையதளத்தில் பதிவு செய்யவும், ராக்கிங் செய்தால் அவர்களை தண்டிப்பது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் பற்றி மாணவ, மாணவிகளிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி மாநிலத்தில் ராக்கிங் கொடுமை இல்லா மாவட்டமாக ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, நாகை உதவி கலெக்டர், தாசில்தார்கள், நாகை மாவட்டத்திலுள்ள 18 கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story