வாட்டாத்திக்கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
வாட்டாத்திக்கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று வா.கொல்லைக்காடு பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒரு வாலிபர் நின்றுக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெங்கரை அருகே உள்ள திப்பன்விடுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் துரைபாண்டி (வயது21) என்பதும் இவர் வாட்டத்திக்கோட்டை, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் துரைபாண்டியை கைது செய்து அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story