காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்; பெண் சாவு


காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்; பெண் சாவு
x
தினத்தந்தி 19 July 2018 3:45 AM IST (Updated: 19 July 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள்-வேன் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,


திருவண்ணாமலை மாவட்டம் வடஇலுப்பை பகுதியில் வசிப்பவர் மண்ணு. இவரது மனைவி லட்சுமி (வயது 48), இவரது உறவினர்கள் சத்தியா (24), தினேஷ் (19). ஒரு மோட்டார்சைக்கிளில் லட்சுமி, சத்தியா, தினேஷ் மூவரும் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை தினேஷ் ஓட்டி சென்றார்.

அப்போது பின்னால் வந்த ஒரு தனியார் பள்ளி வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை தேடி வருகிறார்.

Next Story