தேசிய டென்னிஸ் போட்டி கோவை மாணவர், மாணவி சாம்பியன்
கோவையில் நடைபெற்ற தேசிய டென்னிஸ் போட்டியில் கோவை மாணவர், மாணவி சாம்பியன் பட்டம் பெற்றார்.
கோவை,
கோவை காளப்பட்டியில் உள்ள லீவோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அர்மான், சாய் ராகவ் மோதினர். இதில் அர்மான் 9-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரை இறுதி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ராகேஷ் தருண், ஹேமன்யா மோதினர். இதில் ராகேஷ் தருண் 9-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மாணவிகளுக்கான அரை இறுதி போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த கனிஷ்காஸ்ரீ, தெலுங்கானாவை சேர்ந்த ஸ்ரேயா பட் ஆகியோர் மோதினர். இதில் கனிஷ்கா ஸ்ரீ 9-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் தமிழகத்தை சேர்ந்த ஜோசிகா, லைடியா மோதினர். இதில் ஜோசிகா 9-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இறுதி போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த கனிஷ்கா ஸ்ரீ, தமிழகத்தை சேர்ந்த ஜோசிகா ஆகியோர் மோதினர். இதில் ஜோசிகா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். மாணவர்களுக்கான இறுதி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அர்மான், ராகேஷ் தருண் ஆகியோர் மோதினர்.
இதில் அர்மான் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற ஜோசிகா மற்றும் அர்மான் ஆகிய 2 பேரும் கோவையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story