ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாளை கன்னியாகுமரி வருகை


ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாளை கன்னியாகுமரி வருகை
x
தினத்தந்தி 19 July 2018 4:45 AM IST (Updated: 19 July 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி வருகிறார்.

கன்னியாகுமரி,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மாறுநாள் அதிகாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

மோகன் பகவத் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குமரி மாவட்டத்தில் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துபாண்டியன், கன்னியாகுமரி, நாகர்கோவில் தீயணைப்பு அதிகாரி துரை, விவேகானந்த கேந்திர தலைமை நிலைய செயலாளர் ரெசுநாதன்நாயர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story